அறியவேண்டிய மறைக்கப்பட்ட வரலாறு - அல் ஜிப்ரா ( Algebra)

/
0 Comments

மாதம் ஓர் முஸ்லிம் விஞ்ஞானி - 01




அல்ஜீப்ரா (Algebra)
இடைநிலை பள்ளிகளிலும், முதுநிலை பள்ளிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கணித வகுப்புகளில் நமக்கு பிரச்சனையாக இருக்கக்கூடிய பாடம் தான் அல்ஜீப்ரா (Algebra). இந்த கணிதம் இன்று எல்லா துறைகளிலும் பயன்படுகிறது. இப்பாடத்தின் முக்கியத்துவம் மிகவும் இன்றியன்மையானது. முஸ்லிம்களின் பொற்காலம் எனக்கூறப்பட்டும் இடைக்காலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓர் அறிவியல் ஆராய்ச்சி தான் இது. 
         
கி.பி 780 - கி.பி 850 காலங்களில் வாழ்ந்த மிக சிறந்த விஞ்ஞானி மற்றும் கணிதயியல் வல்லுனர், முகமது பின் மூசா அல் கவாரிஜ்மி (Muhammad ibn Musa al-Khawarizmi) என்பவரால் உருவாக்கப்பட்ட கணித முறைதான் அல்-ஜிப்ரா (Algebra).
                 
இவர் எழுதிய புத்தகம் , அல் கிதாபுல் முக்தார் பிF இசாப் அல் ஜபர் வல் முகாபலா ( Al-Kitāb al-mukhtaṣar fī ḥisāb al-jabr wa-l-muqābala) என்ற புத்தகத்தில் அல்ஜிப்ராவின் அடிப்படை கேட்பாடுகளை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் The Compendious Book on Calculation by Completion and Balancing ( முழுமை மற்றும் சமநிலை சுருக்கமான கணக்கியல் நூல்) என்பர். இந்த புத்தகத்தலைப்பிலேயே அல்-ஜபர் “al-jabr”(முடித்தல் -“completion” ) வார்த்தை உண்டு. இந்த புத்தகத்தில் அன்றாத வாழ்வில் தீர்க்க முடியாத கணக்கு பிரச்சனைகளை எப்படி தன் கணிதவியல் கேட்பாடுகள் மூலம் ஜகாத் கணக்குகளை, மற்றும் பல அன்றாத வாழ்வியல் கணக்குகளை சரிசெய்வார். கால்குலேட்டர் மற்றும் கம்பியுட்டர் இல்லாத அக்காலத்தில் இவரின் கணிதவியல் கேட்பாடு ஒரு சிறந்ததொரு கண்டுப்பிடிப்பாக இருந்தது.
                 
அல் கவாரிஜிமி ( Al Khawarizimi)யின் புத்தகங்கள் கி.பி 1000 மற்றும் கி.பி 1100 ஆண்டு இலத்தீன் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. ஐரோப்பாவில் இவரை அல்கோரித்மி ( Algoritmi) என அழைப்பார்கள். (வார்த்தை algorithm (படிமுறை), இது இவரின் கணித படைப்புகளை அடிப்படையாக கொண்டு உருவானது தான்). அல்ஜீப்ரா முறை இல்லாமல் பொறியியல துறையில் உள்ள கணித, நவீன கணித நடைமுறை சமன்பாடுகளை நிவர்த்திசெய்ய சாத்தியம் குறைவே. இவரின் புத்தகங்களை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கணித பாடப்புத்தகங்களாக அவரது இறப்புக்கு பிறகு பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இவரின் கணிதவியல் கண்டுபிடிப்பு இன்றுவரை போற்றப்பட்டுவரப் படுகிறது.









You may also like

No comments:

Powered by Blogger.